கரூரில் நடந்த விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய் தலைதெறிக்க சென் னைக்கு ஓடிவந்தது, அவரது இரண்டாம் கட்டத் தலைவர்களும் சேர்ந்து தலைமறை வானது, பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை விஜய் நேரில் சந்திக்காதது, அவர்களுக்கான நிவாரண உதவி வழங்குவதில் குழப்பங்கள், சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று நீதிமன்றத்தில் போராடிப் பெற்றது என பலவும், விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை, சந்தேகங்களை எழுப்புகிறது. அதுகுறித்த பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார் அரசியல் விமர்சகர் சேகுவேரா ஜெய்சங்கர்! அதிலிருந்து...
கரூர் சம்பவம் இன்றும் பேசுபொருளாகவே இருக்கிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகிய மூன்று பேரால்தான் விஜய் கரூர் சம்பவத்தில் சிக்கினார் என்ற பேச்சு இருக்கிறது. நீங்கள் பார்த்தவரை என்ன நடந்தது?
இந்த மூன்று பேரையும் தாண்டி ஜெகதீஷ் என்பவரை மறந்துவிட் டார்கள். அவர்தான் எல்லாமே. விஜய்யின் அனைத்து சினிமா வேலை களையும் அவர்தான் பார்க்கிறார். அவர் பி.ஆர்.ஓ. மட்டுமல்ல, கட்சியிலும் இணைப்பொருளாளர் என்கிற பொறுப்பை வகிக்கிறார். சினிமாவில் பல நடிகைகளுக்கு பி.ஆர்.ஓ.வாக இருப்பதாக சொல்கிறார்கள். அவர் பல நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் எனக்கு அதிர்ச்சியளித்தது. அந்த நடிகை களுக்கும், விஜய்க்கும் ஒரு மீடியேட்டராக இருந்துள்ளார் ஜெக தீஷ். அவர் உங்களுக்கு விசுவாசியாகவே இருக்கட்டும், ஆனால் அவரை கட்சியின் இணைப்பொருளாளர் பதவிக்கு கொண்டுவருவது ஏன்? விஜய்யின் பலவீனத்தை பயன்படுத்தி வருகிறார் என்பதால் ஜெகதீஷ்க்கு இந்த பதவியா? ஒரு குறிப்பிட்ட தகவல் என்னவென்றால், ஜெகதீஷின் சட்டையை பிடித்து, "என் குடும் பத்தையே கெடுத்திட்டி யேடா பாவி' என ஜேசன்சஞ்சய் உலுக்கி யுள்ளார்.
விஜய் மகனா?
ஆமாம், விஜய் மகன்தான். தாய்க்கு ஒரு இன்னல் ஏற்படுகிறது என்கிறபோது சட்டையைப் பிடித்து உலுக்கியுள்ளார். அம்மாதான் முக்கியம் என்று ஜேசன் சஞ்சய் சென்றுவிட்டார்.
அப்போ அந்த ஜெகதீஷ் யார்? பொதுவாக ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர் சிக்கலாமா?
கட்சித்தலைவர் என்று வந்தபிறகு, பொது வாழ்க்கை என்று வந்தபிறகு எல்லா விசயத்தையும் பேசத்தான் செய்வார்கள். நடிகனாக இருக்கும்போதே விமர்சிக்கும்போது, எங்களை ஆள நினைக்கும் தலைவனாக நீங்க வர விரும்பும்போது விமர்சிப்போம். இன்று எல்லோரும் புஸ்ஸி ஆனந்த் என்று சொல்கிறார்கள். அவர் நீக்கப்பட்டால் அந்த இடத்திற்கு வரப்போகிறவர் ஜெகதீஷ். ஜெகதீஷை மாமா என்றுதான் விஜய் அன்போடு கூப்பிடுவார். மாமா என்பது தவறான வார்த்தை அல்ல. மதிப்பிற்குரிய வார்த்தை. அதனால்தான் விஜய் அப்படி கூப்பிடுவார்.
எஸ்.ஐ.டி. வேண்டாம் என்றவர்கள் சி.பி.ஐ. விசாரணையை வரவேற்றுள்ளார்களே?
வசமாக சிக்கிவிட்டோம் என்று நினைக்காமல், வரவேற்கின்றனர். ஒரு குற்றம் நடந்திருக்கிறது, அதனை புலனாய்வு செய்யும்போது எல்லோரும் வெளியே வருவார்கள். ஜெகதீஷ் கரூர் சம்பவத்தின்போது அந்த பஸ்ஸில் இருந்தார். அவர் மட்டும்தான் இருந் தாரா, அவருக்கு வேண்டப்பட்ட நடிகைகளும் இருந்தார்களா என்பதெல்லாம் வெளியே வரும். கரூர் பிரச்சாரத்தின்போது பறந்த ட்ரோன்களின் அனைத்து கண்ட்ரோல்களும் அந்த பஸ்ஸுக் குள்தான் இருந்திருக்கிறது. அதனால்தான் பதட்டப்படுகிறார் விஜய். அதனால்தான் எஸ்.ஐ.டி. வேண்டாம் என்கிறார்கள். ஜெகதீஷை போலீசார் விசாரித்தால், விஜய்யின் அத்தனை அந்தரங்க விசயங்களும் வெளியே வரும். ஜெகதீஷ் போட்டோ போல் விஜய் போட்டோவும் வெளியே வர வாய்ப்புள்ளது.
ஆதவ் எப்படி விஜய்க்கு நெருக்கமானார்?
வி.சி.க.விலிருந்து வெளியேறி த.வெ.க.வுக்கு போனார். போன போதுதான் தெரிந்தது, அமைதிப்படை யில் வருவதுபோல் "ஜட்டியை நான்தான் துவைப்பேன்' என்று அங்கு இருவருக்குள் போட்டி இருந்தது. இதனை பயன்படுத்தி அந்த செலவை பார்த்துக்கொள்கிறேன், இந்த செலவை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி நெருக்கமாகிறார் ஆதவ். செலவுக்கு பணம் கொடுப்பவரின் ஆலோசனை யையும் கேட்க வேண்டுமல்லவா? அதனால்தான் அவரது ஆலோசனைகளும் ஏற்கப்பட்டி ருக்கிறது.
புஸ்ஸி ஆனந்த் எப்படி பேனா, பென்சில் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி விஜய் ரசிகர் மன்றத்தில் நுழைந்தாரோ, அதேபோல் ஆர்.எம்.வீரப்பன் பேரன் செந்தில் தியாக ராஜனை தொடர்புகொண்ட ஆதவ் அர்ஜுனா, பேஸ்கட் பால் அசோசியேசனுக்கு பனியன், பால் வாங்கித்தருகிறேன் என்று நுழைந்தார். ஜெனரல் செகரட்டரியாக இருந்தவரைப் பற்றி போட்டுக் கொடுத்து அந்தப் பதவிக்கு வருகிறார். பிரசாந்த் கிஷோர் டீமிலிருந்து தி.மு.க.வுக்குள் நுழைகிறார். இந்த தொடர்பைப் பயன்படுத்தி தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்திற்கு செகரட்டரி ஆகிறார். இப்பவும் தொடர்கிறார். தி.மு.க. அழிக்கிறது, ஒழிக்கிறது என்றால் இந்த பதவியில் இவர் எப்படி நீடிக்கிறார்? எப்படி இவரை இன்னும் விட்டு வைத்திருக்கிறது தி.மு.க? அமைதிப்படை அமாவாசை வேலையைத்தான் முழுமையாக செய்கிறார் ஆதவ்.
வி.சி.க.வில் நுழைந்து முன்னுக்கு வந்தார். இது எல்லோருக்கும் தெரியும். வி.சி.க.வை எப்படியாவது த.வெ.க. கூட்டணிக்கு கொண்டுவரணும் என்று முயற்சித்தார். இதில் திருமாவளவன் தனது அரசியல் அனுபவத்தால் அதனை கண்டுகொள்ளாமல் கழட்டிவிட்டு விட்டார். த.வெ.க. இப்போது ஆதவ் கண்ட் ரோலில்தான் இருக்கிறது. நாங்கள் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங் களையும் தத்தெடுக்கப் போகிறோம், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம் என்கிறார். இதனை ஏன் இவர் சொல்கிறார்? விஜய் ஏன் சொல்லவில்லை? எனக்கு தெரிந்து நான் விசாரித்தவரை, உயிரிழந்தவர்களுக்கு தலா ரூபாய் 20 லட்சம் கொடுப்பதாக சொன்னாரே விஜய். அது போய் சேரவே சேராது. அப்படி கொடுக்க வேண்டுமென்று நினைத்திருந்தால் சாவு விழுந்த அடுத்த நாளே அந்த பணம் போய்ச் சேர்ந்திருக்கும். ஏன் 20 லட்சம் அறிவித்தோம் என்று இப்போது புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். 20 லட்சம் கொடுத்துவிட்டால், விஜய் பணம் கொடுத்து வாயை அடைத்துவிட்டார் என்று சொல்வார்கள். விசாரணை திசைதிரும்பி விட்டது என்பார்கள். அதனால் விசாரணை முடியட்டும் என்று சொல்லி வருகிறார்கள். சி.பி.ஐ. விசாரணை எப்போது முடிவது, இவர்கள் பணம் எப்போது கொடுப்பது? இந்த பணம் நான் விசாரித்தவரை சம்பந்தப்பட்டவர்களுக்கு போய் சேராது!
கரூர் செல்கிறோம், திருமண மண்டபம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று த.வெ.க. சொல்வதாக தகவல் வெளியானதே?
ஜான் ஆரோக்கியசாமிக்கு இதுதான் வேலை. ஏதாவது ஒரு விசயத்தை மறைக்க இன்னொரு விசயத்தை பேசுபொருளாக இருப்பதற்காக கிளப்பிவிட்டுக்கொண்டே இருப்பார். அவர்கள் செய்த வேலைதான் இது. விஜய் மா.செ.க்களிடம் பேசினார் என்றார்கள். எந்தெந்த மாவட்டச் செயலாளரிடம் என்ன பேசினார்? உயிரிழந்த 41 குடும்ப உறுப்பினர்களிடமும் பேசிவிட்டாரா?. வீடியோகாலில் விஜய் பேசினார் என்று சொல்கிறாரே அருண்ராஜ், அவர் எதற்காக த.வெ.க.வில் இருக்கிறார் தெரியுமா? வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வந்தால் அதனை எப்படி கையாள்வது என்பதற்குத்தான். ஏற்கனவே அங்க ஒருவருக்கொருவர் ஈகோ பிரச்சனை அதிகம். இந்த சம்பவத்திற்குப் பிறகு யாரும், யாரோட பேச்சையும் கேட்பது இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியாவோடு செயல்படுகிறார்கள். இதை சமாளிக்கவே விஜய்க்கு நேரமிருக்காது. இந்தக் கட்சிக்கு என்னவோ பெரிய கட்டமைப்பு இருக்கிற மாதிரி பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் காத்துக்கிடப்பது வேடிக்கைதான்!
-தொகுப்பு: வே.ராஜவேல்